வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் பாதியாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இதை குறிப்பிட்டுள்ளது. 2020 செப்டம்பரில் 703 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும், இது 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் 353 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே பதிவாகி உள்ளது.

ஒட்டுமொத்த அடிப்படையில், 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 4,577 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது.

இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 9.3 சதவீதம் சரிவு என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us