‘எச்சரிக்கையுடன் இருங்கள்’…. இந்தியாவிற்கு செல்ல அனுமதி…. புதிய பயணக்கட்டுப்பாடுகள் அறிமுகம்….!!

கொரோனா தொற்று பரவாமல் காரணமாக அமெரிக்க மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு 4 விதமான சுகாதார நிலைகளை அந்நாட்டின் CDC என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அதில் முதல் நிலை குறைவு, 2வது மித நிலை, 3வது உயர்வு நிலை, 4வது மிக உயர்வு நிலை ஆகும். தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது இந்தியாவில் குறைந்துவிட்டது.

இதனால் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதால் CDC அங்கு நிலை ஒன்றை அறிவித்துள்ளது. இருப்பினும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது பாகிஸ்தானில் தீவிரவாதமும் வன்முறையும் நிலவுவதால் அமெரிக்கர்கள் அங்கு செல்வது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவுக்கு செல்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் 10கி.மீ தூரத்திற்கும் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us