தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு…. பற்றி எரியும் கார்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா. இங்கு உள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் மத்திய காவல் நிலைய கட்டிடம் என இரு இடங்களிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதலானது நடைபெற்றுள்ளது. மேலும் இதனால் அருகில் நின்றுக்கொண்டிருந்த கார்கள் பற்றி எரியும் காட்சியானது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக உகாண்டாவில் செயல்பட்டு வரும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் இயக்கம் இத்தாக்குதலை நடத்தியிருக்குக்கூடும் என்று கூறப்படுகிறது.

Contact Us