பிரிட்டனின் லிவர்பூல் குண்டுதாரி தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

பிரிட்டனின் லிவர்பூல் தற்கொலை குண்டுதாரி இஸ்லாமிய மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் என தகவல் வெளியாகியுள்ளது.

லிவர்பூல் மகளிர்மருத்துவமனையின் முன்னால் டாக்சிவெடித்து சிதறியபோது கொல்லப்பட்ட என்ஜோ அல்மேனி ஈராக் – சிரியாவை சேர்ந்தவர் என்றும், இவர் அகதியாக பிரிட்டனிற்குள் நுழைந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

சிரிய ஈராக்கிய பின்னணியை கொண்ட இவர் பல வருடங்களிற்கு முன்னர் மத்திய கிழக்கிலிருந்து தப்பியோடி வந்து பிரிட்டனில் அடைக்கலம் கோரியவர் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

அத்துடன் உயிரிழந்த என்ஜோ அல்மேனி இஸ்லாமிய மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்- தனது பெயரில் சிறிய மாற்றத்தினை செய்தார் எனவும் டெய்லிமெயில் தெரிவித்துள்ளது. எனினும் அவரின் அடைக்ககோரிக்கை மறுக்கப்பட்டதாகவும், எனினும் அவர் பல வருடங்களாக லிவர்பூலில் வாழ்ந்தார் எனவும் டெய்லி மெயில் கூறியுள்ளது.

இந்த நபர் எட்டுமாதங்கள் தீவிர கிறிஸ்தவ குடும்பமொன்றுடன் வாழ்ந்து வந்ததாகவும் , இந்நிலையில் .எனது வீட்டில் 8 மாதங்கள் வசித்த மிகவும் சிறந்த நபர் தாக்குதல் சூத்திரதாரி என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனேன் என முன்னாள் இராணுவவீரரான ஹிட்ச்கொட் தெரிவித்துள்ளார்.

அதோடு இது நம்பவேமுடியாத விடயம் அவர் தீவிரவாதமயப்படுத்தலிற்கு உள்ளாவார் என்பது அவ்வேளையில் தெரியவேயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014 இல் அவரது அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஆபத்தானகத்தியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அல்மேனி கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு உளவியல் கிசிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார் .

மிகவும் அமைதியான நபரான அல்மேனி பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடமுயல்வார் என்பது குறித்து அந்த தம்பதியினர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அல்மெனி இஸ்லாமிய மதத்தை கைவிட்டுவிட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்- 2017 இல் அவருக்கு லிவர்பூல் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கப்பட்டது எனவும் ஹிட்ச்கொட் தெரிவித்துள்ளார்.

அவர் முதலில் 2015 இல் தேவாலயத்திற்கு வந்து கிறிஸ்தவமதத்திற்கு மாறவிரும்பினார் எனவும் அவர் கூறியதாக டெய்லிமெயில் தெரிவித்துள்ளது.

Contact Us