வாழைப்பழங்களை வாங்கிய ஓட்டுநர்…. காத்திருந்த அதிர்ச்சி…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பிரித்தானியா லண்டனின் West Wickhamல் உள்ள சைன்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டில் ஜோ ஸ்டெயின் என்பவர் பவாழைப்பழங்களை சமீபத்தில் வாங்கினார். அந்த வாழைப்பழங்களை பணியாளர் ஒரு பையில் ஜோவிடம் கொடுத்தார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த ஜோ மறுநாள் காலையில் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என நினைத்து அந்த பையை திறந்தார். அப்போது உலகிலேயே கொடிய விஷத்தன்மை கொண்ட சிலந்தி ஒன்று அந்த பைக்கும், வாழைப்பழத்துக்கும் நடுவில் இருப்பதை பார்த்து ஜோ அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜோ கூறியபோது “பையை திறக்கும்போது சிலந்தி இருப்பதை பார்த்து நானும், என் மனைவியும் அதிர்ச்சி அடைந்தோம்.

இந்த பூச்சி குறித்து நான் கூகுள் செய்தபோது அது உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட பிரேசில் வகை வாண்டரிங் சிலந்தி என தெரிந்தது. அதற்கு கிரேக்க மொழியில் கொலையாளி என்று பெயராகும். அது கடித்தால் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இந்நிலையில் அந்த சிலந்தி சிறிது நேரத்தில் இறந்தது. அப்போது அந்த பையை நான் அப்படியே எடுத்து சென்று சமையலறையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டேன். எனினும் என் மனைவியிடம் சமையலறைக்கு செல்ல வேண்டாம் என நான் எச்சரித்தேன். மேலும் இந்த சிலந்தி பொதுவாக தென் அமெரிக்காவில் இருக்கும் மற்றும் இது பெரும்பாலும் வாழை இலைகள் அல்லது கொத்துக்களில் காணப்படுகிறது.

இதன் காரணமாக இதற்கு வாழைப்பழ சிலந்தி என்ற ஒரு பெயரும் இருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இதைக் கூறுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். அவற்றின் விஷம் நரம்பு மண்டலத்திற்கு நச்சுத்தன்மை உடையது என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அந்த சிலந்தியை தங்களிடம் கொடுக்குமாறு சைன்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் ஜோவிடம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதன் செய்தி தொடர்பாளர் கூறியபோது “வாடிக்கையாளரின் இந்த அனுபவத்திற்காக ஜோவிடம் மன்னிப்பு கோர அவரிடம் தொடர்பில் இருக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவை ஆகும். அதை தடுப்பதற்கான செயல்முறைகள் எங்களிடம் உள்ளது” என அவர் கூறினார்.

Contact Us