“அய்யோ, போச்சே!”.. நகைச்சுவையான குரங்கின் புகைப்படத்திற்கு விருது..!!

வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்படத்திற்கான விருதை, கடந்த 2015-ம் வருடத்தில், தொழில்முறை புகைப்பட கலைஞர்களாக இருக்கும், டாம் சுல்லம், பால் ஜாய்சன் மற்றும் ஹிக்ஸ் போன்ற மூவர் உருவாக்கியுள்ளனர். அதாவது, இந்த விருதை, வனவிலங்குகளின் புகைப்படங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும், நகைச்சுவையான முறையில், வனவிலங்குகளை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.

இதற்காக உலகம் முழுக்க 7000 நகைச்சுவை வனவிலங்குகளின் புகைப்படங்களை போட்டியாளர்கள் பதிவேற்றினர். இதில், இங்கிலாந்து நாட்டின் கென் ஜென்சன் என்ற புகைப்படக் கலைஞர், “அச்சோ” என்னும் தலைப்பில் ஒரு குரங்கு புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார். அவரை வெற்றியாளராக அறிவித்து, விருது வழங்கியுள்ளனர்.

இந்த வருடத்திற்கான, போட்டியில் பெறப்படும் தொகையில், 10% போர்னியோவில் இருக்கும் குனுங் பலுங் தேசியப் பூங்காவிற்கு நன்கொடை அளிக்கப்படவுள்ளது.

Contact Us