வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர்களுக்கு அலங்கோலம் செய்த மாணவனின் அப்பா!! பொலிசாரிடம் முறையீடு!!

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரினால், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபரினால் கடந்த சனிக்கிழமை (13) பெற்றோர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்தில் பாடசாலைக்குள் வந்த பெற்றோர் ஒருவர், தன் மகனுடைய வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், ஆசிரியர்களை புகைப்படம் எடுத்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Contact Us