இலங்கை ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர் என கூறி காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பை தளமாக கொண்டுயியங்கும் செய்தி சேவை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த நபர் நேற்று (16) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட மொகமட் ஜாபார் (34) என்ற சந்தேக நபரே இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே குறித்த தாக்குதல் தொடர்பாக கைதாகியுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Contact Us