2 கள்வர்களும் கனடாவில் மீட்டிங் போடுகிறார்கள் மானம் கெட்ட சில கனடா தமிழர்களும் உடந்தையா ?

DBS ஜெயராஜ் என்னும் இலங்கை புலனாய்வு துறை நபரின் மற்றும் கனடா நக்கீரன் ஏற்பாட்டில் கனடாவில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் கூட்டம் ஒன்றை 20ம் திகதி நடத்த உள்ளார்கள். இந்த DBS ஜெயராஜின் மச்சான் தான் சுமந்திரன் , அதற்காக அரசாங்க செலவில் இந்த ஏற்பாட்டை DBS ஜெயராஜ் கனடா ஸ்காபரோவில் அமைத்துக் கொடுத்துள்ளார். சனிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் சில தமிழர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தான் பெரும் வேதனைக்குரிய விடையம். சுமந்திரன் இந்த கனடா கூட்டம் முடிய லண்டன் வந்தும் கூட்டம் நடத்த உள்ளார் என்பது ஒரு புறம் இருக்க. சுமந்திரன் தமிழர்களது பிரதி நிதி அல்ல என்பதனை முதலில் தமிழர்கள் மேற்கு உலகத்திற்கு புரியவைக்க வேண்டும். இதனை ..

மானமுள்ள கனடா தமிழர்கள் நிச்சயம் செய்வார்கள் என உலகத் தமிழர்கள் எதிர்பார்கிறார்கள். இப்படியான கூட்டங்களை நடத்தி, அமெரிக்க அரசு மற்றும் பிரித்தானிய அரசுக்கு தாம் தமிழர்களின் பிரதிநிதி என்று காட்ட முற்படுகிறார் சுமந்திரன். இந்த பின் வாசல் சுமந்திரனை இப்படியே விட்டால், மேலும் பல அழிவுகளை தமிழர்கள் சந்திக்க நேரிடும் மக்களே. ஜாக்கிரதை.

Contact Us