மண்சரிவில் புதையுண்ட பெண் ஒருவரின் சடலம் மீட்பு! பிரிட்டிஷ் கொலம்பியாவில் சம்பவம்

பிரட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி புதையுண்ட பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ந்வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இதுவரை இரண்டு பேரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் காணாமல் போனவர்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ள்னர்.

Contact Us