பழிக்குப் பழி வாங்கத்தான் அந்த கனேடிய மருத்துவரை அடித்துக் கொன்றேன்: குற்றவாளி தெரிவித்த திடுக் தகவல்

ற்றுநோய் பாதிக்கப்பட்ட தனக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, தனக்கு ஆண்மை நீக்கம் செய்ததால்தான் மருத்துவரை அடித்துக்கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் கனேடியர் ஒருவர்.

கனடாவின் ஆல்பர்ட்டாவிலுள்ள Red Deer பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நுழைந்த Deng Mabiour (54) என்பவர், Dr. Walter Reynolds (45) என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

Mabiour பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தான் அரியவகை புற்றுநோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, Dr. Walter தனக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தான் ஆல்பர்ட்டா மருத்தவர்கள் அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பு, தனது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் புகாரளித்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய Mabiour, நான் ஒரு குற்றவாளி அல்ல, நான் செய்த குற்றத்திற்கு அரசாங்கம் உட்பட இவர்கள் அனைவரும்தான் காரணம் என்றார்.

இது பழிக்குப் பழி வாங்கும் ஒரு செயல் என்று கூறிய Mabiour, நான் கருப்பினத்தவன் என்பதால் அவர்கள் எனக்கு ஆண்மை நீக்கம் செய்தார்கள். என்னைப்போல இன்னொரு கருப்பினத்தவர் ஆண்மை நீக்கம் செய்யப்படக்கூடாது என்பதால்தான் Dr. Walterஐக் கொலை செய்தேன் என்றார்.

ஆனால், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த Mabiour மீதான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் நடத்தப்பட இருந்த நிலையில், புற்றுநோய்க்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இந்த மாத துவக்கத்திலேயே இறந்துபோனார்!

 

Contact Us