நம்பி ஏமார்ந்த நடிகை சினேகா… கணவர் பிரசன்னா பரபரப்பு புகார்..!

நடிகர் பிரசன்னா கானத்தூர் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகை சினேகா 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர். திருமணமான பின்னர் திரை படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதால் அவரை விளம்பரங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா தம்பதியர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா, சமீபத்தில் சந்தியா மற்றும் சிவராஜ் கெளரி, என்பவர் மூலம் எம்.எஸ். கெளரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமெண்ட் கம்பெனியில் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

இதனை நம்பி நடிகர் பிரசன்னா ஆன்லைன் மூலமாக 25 லட்சம் ரூபாயும் ரொக்கமாக 1 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார்.

ஆனால் முதலீடு செய்தது முதல் மே மாதத்திலிருந்து தற்போது வரை மாதந்தோறும் வழங்கும் தொகையை தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணம் குறித்து கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி நடிகர் பிரசன்னா கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆன்லைன் முதலீடுகளில் பல மோசடி சம்பவங்களால் பலர் ஏமாறிக்கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும், நடிகையும் அமர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Contact Us