“ஓட்டுனரின்றி இயங்கும் புல்லட் ரயில்!”.. சோதனையில் வெற்றி பெற்று ஜப்பான் சாதனை..!!

ஜப்பான் நாட்டில் ஷிங்கன்சென் என்ற ஓட்டுனரின்றி இயங்கும் அதிவேக புல்லட் ரயிலை, நேற்று சோதனை செய்துள்ளனர். இந்த ரயிலில், 12 பெட்டிகள் இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் ஓட்டுனரின்றி இயங்கும். எனினும் எந்த தவறுகளும் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநர்களும் பணியாளர்களும் சோதனையின்போது ரயிலில் இருந்துள்ளனர்.

நீகட்டா என்ற ரயில் நிலையத்திலிருந்து, ஐந்து கிலோமீட்டர்கள் பயணித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை, அதிவேகத்தில் அடைந்தது. அதன்பின்பு, நீகட்டா ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டனர். ஜப்பான் அரசு, புல்லட் ரயில் வெற்றிகரமாக இயங்கியதாக தெரிவித்திருக்கிறது.

Contact Us