“ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி!”.. புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரபல நாடு..!!

ஸ்விட்சர்லாந்தில் Marriage for All என்ற அமைப்பு நடத்திய பிரச்சாரத்தின் முயற்சிக்கு வாக்காளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கடைசியாக ஸ்விட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது.

திருமணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள், ஜனவரி மாதத்திலிருந்து அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை ஆறு மாதங்கள் கழித்து நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் தேதியன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும், ஏற்கனவே திருமணம் செய்தவர்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. அந்த தேதிக்குப் பின் திருமணத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாது. இந்த சட்டம் கொண்டுவரப்படும் முதலாண்டில் நூற்றுக்கணக்கானவர்கள் அதனை பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Marriage For All பிரச்சாரத்தினுடைய இணை தலைவரான, Maria von Kaenel கூறுகையில், இந்த வாக்கெடுப்பின் இறுதியில் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. நாங்கள் திருமண சமத்துவத்தை வேண்டி 30 வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தோம். இந்த வாக்களிப்பிற்கான முடிவு ஒரு வரலாற்று தருணமாக அமைந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

Contact Us