மற்றுமோர் வர்த்தமானியை வெளியிட்டார் கோட்டாபய (விபரம் இணைப்பு)

அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பைத் திருத்தியமைத்துப் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம்(17) வெளியிடப்பட்டுள்ளது. தேசிய முன்னுரிமை வேலைத்திட்டத்தின் கீழ் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பு திருத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு, திறன் மேம்பாட்டுத் தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பு ஆகியவற்றிலும் இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Contact Us