பொருளாதார பிரச்சினையில் இலங்கை மக்கள் திண்டாடும் நிலையில் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரதமர் மஹிந்த!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது 76 பிறந்தநாளை அவரது குடும்பத்தினருடன் சற்றுமுன்னர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை நாமல் ராஜபக்ஷ தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பிறந்த கொண்டாடத்தின் போது மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ, யோசித்த ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ச உட்பட அவர்களின் மனைவிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எனக்கும் எனது தம்பிமாருக்கும் ஒரு சிறந்த தந்தையாக நாம் இன்று இருக்கும் நிலைக்கு எங்களை உயர்த்த நீங்கள் எடுத்த முயற்சிகளை எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். உங்களுக்கு எமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என நாமல் ராஜபக்ஷ முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Contact Us