இந்த வீட்டுக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற 16 வயது சிறுவனை அடித்து உதைத்த ஊர் மக்கள்… என்ன கொடுமை ?

 

வெளிநாட்டுக் காசு, கையில் மோபைல் போன். அதில் டேட்டா வேற. பலான படங்களை பார்த்துப் பார்த்து பாழாய் போயுள்ளது தமிழ் சமூகம். ஆனால் இதனை எவரும் கவனிப்பதே இல்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை. தனது மகன் கையில் லேட்டஸ் மோபைல் போன் இருந்தால் போதும் என்று நினைக்கும் அம்மா மார்கள். மற்ற மனிதர்களைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பது அவசியம். இலலையேல், தனது மகன் என்ன செய்கிறான் என்று கண்காணிப்பது அவசியம். இங்கே நடந்த சம்பவத்தை பாருங்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தீர்த்தக்கரைப் பகுதியில் 06 வயதுச் சிறுமி ஒருவரை இழுத்துச் சென்ற இளைஞர் ஒருவர் பொதுமக்களால் பிடித்து நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தீர்த்தக்கரையில் தனியாக நின்றிருந்த சிறுமி ஒருவரை 16 வயதுடைய சிறுவன் ஒருவர் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் இழுத்துச் சென்றதுடன் சிறுமியின் வாய், கை என்பவற்றையும் கட்டுவதற்கு முயற்சித்திருக்கின்றார்.துணிந்து செயற்பட்ட குறித்த சிறுமி அங்கிருந்து அபாயக்குரல் எழுப்பியதுடன் வெளியே ஓடிவந்துள்ளார்.சம்பவத்தை அவதானித்த அந்தப் பகுதி மக்கள் அங்கு சென்று சிறுவனைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Contact Us