F:35B போர் விமானம் விழுந்த இடத்தில் குவியும் பிரிட்டன் படை: ரஷ்யா பிளேனை களவாடிச் செல்ல கூடும் என்ற அச்சம் !

பிரித்தானியாவின் அதி நவீன போர் விமானமான F:35B மெடிட்டரேனியன் கடலில், விழுந்து நொருங்கியுள்ளது. ஆனால் அதில் பயணித்த விமான தனது ஆசனத்தை சரியான நேரத்தில் வெளியே தள்ளி தப்பித்துக் கொண்டார். குறித்த போர் விமானத்தில் அதி நவீன தொழில் நுட்ப்ப வசதிகள் உள்ளது. இதனால் ரஷ்ய போர் கப்பல் அந்த கடல் பகுதிக்குச் சென்று, கடலில் மூழ்கிய விமானத்தை எடுதுச் செல்லக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. காரணம் என்னவென்றால், ரஷ்யாவின் கடல்படை மீட்ப்புக் கப்பல் ஒன்று தற்போது அதே இடம் நோக்கி நகர ஆரம்பித்துள்ள விடையத்தை பிரித்தானிய உளவுப் பிரிவினர் உறுதி செய்துள்ளார்கள். இதனை அடுத்து அந்த கடல் பகுதிக்கு பிரித்தானிய கடல் படை கப்பல் செல்ல முன்னரே, ரஷ்ய கப்பல் சென்று விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். இதனால் அமெரிக்காவின் உதவிய உடனடியாக பிரித்தானியா நாடியுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து… MOD: UK calls on US for help in search and salvage of RAF F35 stealth jet in race against Russia to locate wreck at bottom of Mediterranean 24 hours after crash:

குறித்த கடல் பகுதியில் சஞ்சரித்துள்ள அமெரிக்க போர் கப்பல் ஒன்று, விமானம் விழ்ந்த இடம் நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. இதேவேளை கடலுக்கு அடியே சுமார் 1 மைல் ஆழத்தில் தேடுதல் நடவடிக்கையில் பிரித்தானியா இறங்கவுள்ளது. இந்த விமானத்தின் பாகங்களை எல்லாம் வெளியே எடுக்காமல் பிரித்தானிய கடல் படை ஓயப் போவது இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

Contact Us