கவனமாக பாருங்கள்: பேய் பியர் கிளாசை தட்டி விடும் வீடியோ: கதையல்ல நிஜம்: உண்மையான வீடியோ …

சரி நேரான மேசை அது. சாய்ந்த மேசையும் அல்ல.  ஒரு பக்கம் பதிவாக உள்ள மேசையும் அல்ல.. ஆனால் அங்கே இருந்த பியர் கிளாஸ் தானாக அரக்கி அப்படியே விழுகிறது. இது அனைத்தும் CCTV காட்சியில் படமாகியுள்ளது. ஆனால் எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர். நான் வேலை செய்த இடம் ஒன்றில் பேய்கள் ஆவிகள் இருப்பதாக கூறி வந்தார்கள். அதிலும் அங்கே உள்ள ஆவிகளுக்கு “டீ” மற்றும் காப்பி என்றால் மிகவும் இஷ்டம் என்றும் பேசி வந்தார்கள். ஆனால் இதை எல்லாம் நம்பும்,  ஆள் நான் இல்லை. ஒரு நாள் நான் , வேலை செய்யும் இடத்தில் உள்ள உணவக பகுதிக்குச் சென்று தேனீர் போட்டேன். கப்பை வைத்து விட்டு, கரன்டியை கழுவி வைத்து விட்டு,  திரும்பி எனது தேனீரை பார்த்தால். அது நான் வைத்திருந்த இடத்தில் இருந்து சுமார் 4 அடி நகர்ந்து இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை…

பின்னர் வேலை செய்யும் சக ஆட்களிடம்,  இங்கே என்ன தான் நடக்கிறது என்று கேட்டேன். அவர்கள் சகஜமாக கூறினார்கள். இவை ஜாஸ்பர் ஆவிகள். மனிதர்களை அச்சுறுத்துவது இல்லை. மிகவும் விளையாட்டானவை என்று. இப்படியே சில வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் எங்கள் கம்பெனியை வேறு ஒரு நிறுவனம் வாங்கி விட்டதாக கூறி, எங்கள் அனைவரையும் வேலையால் நிறுத்தி விட்டார்கள். புதிதாக வாங்கிய கம்பெனி, அந்த இடத்தையே அழித்து. அதில் அழகான அடுக்கு மாடி கட்டடங்களை கட்ட திட்டம் தீட்டியது. ஆனால் அவர்கள் அந்த இடத்தை தோண்டும் போது தான், அதிர்ச்சியான விடையம் ஒன்று வெளியானது. அது ஒரு 2ம் உலகப் போர் சவக்காலை. அங்கே பல பிணங்கள் மண்ணுக்கு அடியே இருந்துள்ளது.

இதனால் எழுந்த சர்சையில் குறித்த கம்பெனி,  தொடர் மாடி குடியிருப்பை கட்டவில்லை. அப்படியே விலகிச் சென்றுவிட்டது. அன்று எனக்கு அதற்கான விடை கிடைத்தது. ஆனால் இங்கே நாம் இணைத்துள்ள வீடியோவைப் பாருங்கள். ஆவிகள் இருக்கிறது என்பது உண்மை என்பதனை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.

Contact Us