2 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த மருத்துவர் இறுதியில் கொரோனாவுக்கு பலி: வெறும் 45 வயதில். இப்படியா ?

பிரித்தானியாவில் சத்திர சிகிச்சைப் பிரிவில் வேலைபார்த்து வந்த, ஹலீம் என்ற 45 வயது மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். இதுவரை அவர் சுமார் 2 லட்சத்தி 50,000 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர் என்றும், கடந்த 4 மாத காலமாக வீட்டிற்கு செல்லாமல், வெளியே தங்கி இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வந்துள்ளார். வீட்டிற்கு சென்றால், சில வேளை தான் கொரோனாவை கொண்டு போய் தனது குடும்பத்திற்கு தொற்றுக் கொடுத்து விடுவேன் என்ற அச்சம் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இன் நிலையில் தான் அவர் பயந்தது போலவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு. இறுதியில் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது வரை 2 லட்சத்தி 50 ஆயிரம் பேர்களது உயிரைக் காத்த…

மாபெரும் ஹீரோ ஹலீம் தான் என்று, NHS அவருக்கு புகழாரம் சுட்டியுள்ளது. பல நுணுக்கமான சத்திர சிகிச்சைகளை அவர் திறம்பட செய்து பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இன்று அவரது இழப்பு எமக்கு ஒரு பெரும் இழப்பு என்று NHS தெரிவித்துள்ளது.

Contact Us