“வாடகை வேணாம் ,நீதான் வேணும்” -வீடு தேடிய ஐ .டி. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு டெக் நிறுவனத்தில் பணிபுரியும் குஜராத்தைச் சேர்ந்த 27 வயது பெண்,அங்கு குடியிருக்க ஒரு வீடு தேடினார் .அதனால் அவர் தனக்கு ஒரு வாடகைக்கு வீடு வேண்டுமென்று பேஸ் புக்கில் உள்ள ரியல் எஸ்டேட் பகுதியில் ஒரு விளம்பரம் கொடுத்தார் .அப்போது அந்த விளம்பரத்தை பார்த்து அக்ஷய் சிங் என்ற நபர் தொடர்பு கொண்டார் .அப்போது அந்த சிங் அந்த பெண்ணிடம் ஷேரிங் சிஸ்டத்தில் வேண்டுமா அல்லது தனி அபார்ட்மெண்ட் வேண்டுமா என்று கேட்டார் .

அதன் பிறகு அந்த பெண் தனக்கு தனி வீடு வேண்டுமென்று கேட்டதும் ,அந்த நபர் அந்த பெண்ணிடம் தன்னிடம் ஒரு வீடு உள்ளதென்றும் அதற்கு வாடகை எதுவும் தர வேண்டாமென்றும் ,அதற்கு பதிலாக பாலியல் உறவுக்கு வந்தால் போதுமென்று கூறினார் .அதை கேட்டு அந்த பெண் கோபமடைந்து அவரை எச்சரித்து போனை வைத்து விட்டார் .அதன் பிறகு அந்த நபர் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்து தொல்லை கொடுத்தார் .அப்போதெல்லாம் அவர் அந்த பெண்ணின் போலியான கணக்கை ஊடகத்தில் துவங்கி அவரை பற்றி அவதூறு செய்வதாக மிரட்டினார் .இதனால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்து அந்த அக்ஷய் சிங் என்ற நபர் மீது போலீசில் புகார் தந்தார் .பின்னர் அவர் பேஸ்புக்கில் அவரின் கணக்கை ப்ளாக் செய்து , அவருடன் நடந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டுடன் மும்பை காவல்துறைக்கு ட்வீட் செய்தார்.பின்னர் போலீசார் அந்த பெண்ணை சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்

Contact Us