“இந்த வாட்ச்மேனோடு வாழ வா ,இல்லேன்னா உன்னை இங்கேயே …”நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான சவுந்தர் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சந்தியா என்ற 23 வயதான பெண்ணுடன் திருமணம் நடந்தது. அந்த சந்தியா பாடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இந்நிலையில் அந்த வாட்ச்மேன் அடிக்கடி தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு தகராறு செய்து கொண்டேயிருந்தார் .அதனால் அந்த பெண் அந்த கணவரை பிரிந்து சென்று விட்டார்

மேலும் அந்த சந்தியா வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மனைவியில்லாமல் தனியே வாழ முடியாத அந்த சவுந்தர் கடந்த வாரம் தன்னுடைய மனைவியை தேடி அவரின் வீட்டருகே சென்றார் .
அப்போது அந்த இரவு நேரத்தில் அந்த சந்தியா தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த சௌந்தர் தன்னுடைய மனைவியிடம் தன்னோடு வாழ வருமாறு கேட்டு தகராறு செய்தார் .அப்போது இருவருக்கும் நடுரோட்டிலேயே வாக்கு வாதம் முற்றியது .அப்போது அந்த சௌந்தர் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து அந்த சந்தியாவின் உடல் முழுவதும் குத்தி காயப்படுத்தினார் .பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணை அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் பொது மக்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் சௌந்தரை கைது செய்தனர்

Contact Us