‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துல நடிச்சதுக்கு ஒரே காரணம் இதான் – கயல் ஆனந்தி!

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்ததிற்காக வருத்தப்பட்டேன் என நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், மனிஷா யாதவ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. தமிழ் திரையுலகில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப்படத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆனந்தி பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடல்ட் காமெடி ஜானரில் உருவான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ பலவித சர்ச்சைகளை கிளப்பி இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பை பெற்றது. படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்திருந்திருந்தாலும், வசூல்ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாகவே அமைந்தது ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’.

இந்தப்படத்தில் நடித்த கயல் ஆனந்தி பரியேறும் பெருமாள், சண்டிவீரன் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்ததிற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசிய அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் முதலில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கதை சொல்லும் போது தனக்கு அப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் இல்லை எனவும் ஆனால் படம் எடுக்கப்பட்டது வேறுவிதமாக இருந்ததாகவும், அந்த நேரத்தில் படத்தை விட்டு விலகுவதாக படக்குழுவினரிடம் அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தயாரிப்பாளர் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என தெரிவித்ததால் மட்டுமே தொடர்ந்து அந்தப்படத்தில் நடித்ததாகவும், இனிமேல் அப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் ஆனந்தி. அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us