58 வயதில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு நீதிபதி பளார் தீர்ப்பு!

கிருஷ்ணகிரி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டி அருகே உள்ளது தர்மதோப்பு. இந்த ஊரைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 58). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுந்தரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுந்தரத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Contact Us