லண்டனில் 4 ஈழத் தமிழர்கள் பலி: அப்பா நெருப்பு எரியுது என்று கதறிய மனைவி: வேலையில் இருந்து ஓடி வந்த கணவர்-

அப்பா வீட்டில் நெருப்பு எரியுது என்று கதறியுள்ளார் மனைவி. வேலையில் இருந்த கணவரோடு பேசும் போதே போன் கட் ஆகி விட்டது. கணவர் மீண்டும் முயற்ச்சி செய்தார். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. உடனே அவர் வேலையில் இருந்து புறப்பட்டு ஓடி வந்தார். ஆனால் அங்கே மனைவி, 2 பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் தீயில் இறந்து விட்டார்கள். லண்டனை அடுத்து பெக்ஸ்லி- ஹீத் என்னும் இடத்தில் இந்த பெரும் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கீழ் வீட்டில் தீ ஏற்பட்டதால், மேலே இந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கிக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. சமீபத்தில் தான் வீட்டை திருத்தியும் உள்ளார்கள்… 6 தீ அணைக்கும் வாகனம் மற்றும் ..

40 தீ அணைக்கும் படையினர் போராடியும் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. இறந்த 2 பெண்களின் வயது தெரியவில்லை. ஆனால் 2 குழந்தையில் ஒன்று கை குழந்தை என்றும் மற்றது 5 அல்லது 6 வயது மதிக்கத் தக்க குழந்தை என்றும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. நேற்று(வியாழன்) இரவு 8.30 மணிக்கு திடீரென அவர்களது வீடு தீ பற்றிக் கொண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். தீயினால் ஏற்பட்ட புகையை அதிகம் சுவாசித்ததன் காரணமாகவே அவர்கள் 4 பேரும் இறந்திருக்க கூடும் என்று, பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். இறந்த ஈழத் தமிழர்கள் ஆத்மா சாந்தியடைய அதிர்வு இணைய வாசர்களே பிரார்த்திப்போமாக… ஓம் ஷாந்தி… ஓம் ஷாந்தி….

மேலதிக விபரம் தெரிந்தவர்கள் எங்களை தயவு செய்து தொடர்பு கொண்டு, செய்திகளை தந்து உதவுங்கள் நன்றி. தொடர்பு 07448188888;

Contact Us