படிகளில் தீபத்தை வைத்த விளைவு தான் வீட்டில் தீ பிடித்துள்ளது எனக் கண்டு பிடிப்பு !

நேற்று பெக்ஸ்லி ஹீத்தில் நடந்த தீ விபத்திற்கு காரணம் கார்த்திகை தீபம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கீழ் உள்ள படிகளில், நிரூபா என்ற இந்த 2 பிள்ளைகளின் தாயாரும். நிருபாவின் அம்மா( சமீபத்தில் இலங்கையில் இருந்து பிள்ளைப் பெத்தை பார்க்க வந்தவர்) இணைந்து தீபங்களை ஏற்றி வைத்துள்ளார்கள். அதில் இருந்து பரவிய தீ காரணமாக அவர்களால் கீழே செல்ல முடியவில்லை. தப்பிக்க வேறு வழிகளும் இருக்கவில்லை. ஜன்னல் வழியாக குதித்தும் இருக்க முடியும். ஏன் எனில் நிருபாவின் கணவரின் தம்பி உள்ளே உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவர் நெருப்பின் புகை காரணமாக எழுந்து, ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளார். ஆனால் கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. தமிழர்களே இதில் இருந்து பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது…

நேற்றைய தினம் லண்டனில் எத்தனை பேர் உங்கள் வீடுகளில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தீர்கள் ? அது சற்று தவறி இருந்தால் உங்கள் வீட்டிலும் இதே நிலை தான் தோன்றி இருக்கும் என்பதனை எவரும் மறக்க வேண்டாம். எமது சாத்திர சம்பிரதாயங்கள் மிக மிக முக்கியம் தான். கார்த்திகை தீபம், முதல் கொண்டு பொங்கல் வரை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் நாம் இருப்பது வெளிநாட்டில். எனவே அதற்கு தகுந்தால் போல வாழப் பழகிக் கொள்ளுதல் நல்லது. கார்த்திகை தீபத்தை வீட்டின் முன் வாசலில் வைக்க முடியும். அதுவும் நிலத்தில் வைத்தால் அதனால் வீட்டுக்கு ஒன்றும் நடக்காது. மேலும் சொல்லப் போனால் இப்படியான சில விபத்துகளுக்கு இன்சூரன்ஸ் கூட கவர் பண்ணாது. ஏன் என்றால் நீங்கள் தான் வீட்டை எரித்தீர்கள் என்று கூறுவார்கள்.

வீட்டில் ஊது பத்தி கொழுத்தி வைத்து, அதில் தீ பிடித்து ஒரு தமிழ் குடும்பத்தில் சிலர் இறந்த சம்பவம் உங்களில் பலருக்கு நினைவு இருக்கலாம். இன்று இளம் குடும்பப் பெண் நிரூபா, அவரது பெண் குழந்தை ஷசனா மற்றும் மகன் தபிஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்துள்ளார்கள். இது போக பிள்ளைப் பெற்றை பார்க்க வந்த நிரூபாவின் தாயாரும் இறந்து விட்டார். குடும்பத்தாரை இழந்து தவிக்கும் யோகன் தங்க வடிவேல் அவர்கள், தீராத துயரில் உள்ளார். அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை நாம் தெரிவித்துக் கொள்வோமாக. தமிழர்களே வீட்டில் ஊது பத்தி ஏற்றுவது, சாமி அறையில் விளக்கு ஏற்றுவது மற்றும் கார்த்திகை தீபம் ஏற்றுவது, என்பது எல்லாம் மிக மிக ஆபத்தான விடையம். அதனை எவ்வாறு பாதுகாப்பாகச் செய்வது என்று பாருங்கள்.

தயவு செய்தி இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிருங்கள். ஒரு விழிப்புணர்வை இனியாவது கொண்டு வருவோம்.

நெருப்பு எரியும் வேளையில் ஆபத்தில்.. கதவுகளை திறக்க முடியவில்லை- தப்பிய இளைஞர் சொல்லும் விடையம்: இப்படி உங்கள் வீட்டில் இருந்தால் மிக மிக கவனம் … ! https://www.athirvu.in/89173/

Contact Us