“டாக்டர் ஃபர்ஸ்ட், கம்பவுண்டர் நெக்ஸ்ட் ..” கிளினிக்கில் பதினாலு வயது பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள பரேலியில் ஒரு 14 வயதான பெண் அடிக்கடி அங்குள்ள மார்க்கெட்டுக்கு தனியே சென்று வருவார், அந்த மார்க்கெட்டில் ஒரு மினி க்ளினிக் இருக்கிறது ,அந்த கிளினிக்கில் ராம்பாபு என்ற டாக்டரும் அவருக்கு உதவியாக ஒரு கம்பௌன்டரும் இருக்கின்றனர். அந்த இருவரும் அந்த பெண் அடிக்கடி தனியாக மார்க்கெட் வருவதை நோட்டமிட்டு வந்தனர் .அதனால் அவர்களிருவரும் அந்த பெண்ணை ஒரு நாள் தங்கள் கிளினிக்கில் வைத்து பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அந்த 14 வயதான பெண் தனியாக வழக்கம்போல அந்த மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணை பார்த்த அந்த கம்பௌண்டர் கிளினிக்கில் டாக்டர் கூப்பிடுவதாக சொல்லி கூப்பிட்டார்.

அதை நம்பி அங்கு சென்ற அவரை முதலில் அந்த டாக்டரும் அடுத்து அவரின் உதவியாளரும் பலாத்காரம் செய்தனர். அப்போது அந்த பெண் தப்பிக்க முயற்சித்தாலும் அவர்கள் அந்த பெண்ணை தாக்கினர். பின்னர் அந்த பெண் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை அவரின் பெற்றோரிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் அந்த இருவர் மீதும் போலீசில் புகார் தந்தார்கள்.

போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை சோதனை செய்ததில் அவர்களின் குற்றம் ஊர்ஜிதமானது. பின்னர் அவர்களை உடனடியாக போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது .

Contact Us