பாதீட்டில் ராஜபக்ச குடும்ப அமைச்சகங்களுக்கு மாத்திரம் 60 வீத நிதி ஒதுக்கீடு – அம்பலப்படுத்திய அநுரகுமார

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5200 மில்லியன் ரூபாயில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சோ்ந்த அமைச்சகங்களுக்கு மாத்திரம் 3470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பாதீட்டு ஒதுக்கீட்டில் 60 வீத ஒதுக்கீடாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 6 நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவா் இதனைக் குறிப்பிட்டார்.

ஏனைய முக்கியமான அமைச்சுக்களுக்கு குறைந்தளான நிதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தொிவித்தார்.

இலங்கையில் கடமைகளில் இருக்கும் 95ஆயிரம் பொலிஸ் அதிகாாிகளில் 45ஆயிரம் பொலிஸ் அதிகாாிகள், அமைச்சா்கள் மற்றும் அரசியலாளா்களின் பாதுகாப்புக்களுக்காக பணியில் அமா்த்தப்பட்டுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசச் செலவுகளை குறைக்கமுடியும் என்றும் அவா் குறிப்பிட்டார்.

இலங்கையை சுற்றி வருடம் ஒன்றுக்கு 35ஆயிரம் கப்பல்கள் பயணிக்கின்றன.

இலங்கையின் அரசியல்வாதிகள் அடையாளம் காணவில்லை.

எனினும் இந்தியாவும் சீனாவும் இதன் மூக்கியத்துவத்தை அறிந்துள்ளன.

எனவேதான் அவை இலங்கையின் துறைமுகங்கள் தொடா்பில் அக்கறைக்காட்டுகின்றன என்று அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

2022 பாதீட்டில் யதாா்த்தமான வருமானங்கள் மற்றும் கடன்படுகை புள்ளிவிபரங்கள் பதிவிடப்படவில்லை.

எனவே இந்த பாதீட்டை பற்றி விவாதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் அழகான நாடு, வரலாற்றுச் சொத்துக்கள் உள்ளன.

எனினும் மோசடிக்காரர்களின் பிடியில் இந்த தாய்நாடு சிக்கியுள்ளது.

இதன் காரணமாக, மக்கள் பாாிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பேப்பச்சுவல் ட்ரசரிஸின் 850 கோடி ரூபாவை பாதீட்டுக்குள் கொண்டு வந்ததமை, பாதீட்டில் சிறந்த யோசனையாகும்.

எனினும் பெண்டோராவின் மூலம் கண்டறியப்பட்ட 3500 கோடி ரூபா ஏன் இலங்கைக்கு கொண்டு வரக்கூடாது.

சொந்தக்காரா்கள் தொடர்புக்கொண்டிருப்பதன் காரணமாகவா?அது இதில் உள்ளடக்கப்படவில்லையே என்று அனுரகுமார கேள்வி எழுப்பினார்.

எயார் லங்கா கொள்வனவு தொடா்பில் லண்டனில் 2மில்லியன் டொலா் மோசடி இடம்பெற்றுள்ளது.

எனினும் அந்த பணத்தை கொண்டு வருவது தொடா்பாக பாதீட்டு உரையில் எதுவும் கூறப்படவில்லை.

இதேவேளை நிதியமைச்சா் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமெனக் கூறப்படும் மல்வானை வீடு மற்றும் பல ஏக்கர் காணியை இதுவரையில் எவரும் பொறுப்பேற்கவில்லை

எனவே அதனை இந்த பாதீட்டின் ஊடாக அரச நிதிக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று என்று அநுரகுமார குறிப்பிட்டார்.

அப்படியானால் இந்த பாதீட்டு யோசனை சிறந்த யோசனையாக இருந்திருக்கும்.

சீனாவின் பசளைக் கப்பல் நிறுவனம், இலங்கையிடம் பணம் கோருவதில் எவ்வித தவறையும் கூறமுடியாது.

ஏனெனில் குறித்த பசளையில் பக்றீாியாக்கள் இருப்பதாக இலங்கையின் அதிகாரிகள் தொிவித்திருந்தபோதும், அதற்கு முன்னதாகவே பசளையை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது.

அது விநியோகஸ்தருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சட்டரீதியாக சீனா, இலங்கையிடம் பணத்தைக் கோருவதில் எவ்வித தவறும் இல்லை என்றும் அநுரகுமார குறிப்பிட்டார்.

Contact Us