நெருப்பு எரியும் வேளையில் ஆபத்தில்.. கதவுகளை திறக்க முடியவில்லை- தப்பிய இளைஞர் சொல்லும் விடையம்: இப்படி உங்கள் வீட்டில் இருந்தால் மிக மிக கவனம் … !

பெக்ஸ்லி ஹீத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தமிழர்கள் இறந்துள்ளார்கள். இதில் அந்த வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தப்பிய இளைஞர்,  கால் முறிவடைந்து வைத்தியசாலையில் உள்ளார். அவர் கூறுகையில், தீ பற்றிய பின்னர் வீட்டின் பல கதவுகளை என்னால் திறக்கவே முடியவில்லை என்று கூறியுள்ளார். அது உண்மை தான். பலரது வீடுகளில் கதவுப் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு திட்டம்(Safety System) தான் இது. ஆனால் இது பெரும் பாலும் உயிராபத்தை விளைவிக்கவும் கூடும். பலர் இதனை அவதானிக்க தவறி இருப்பீர்கள்.  இப்படி ஒன்று எங்கள் வீட்டுக் கதவுகளில் உள்ளதா என்று தெரியாமல் பலர் இருக்கிறீர்கள். உடனே சென்று கவனித்துப் பாருங்கள்……லண்டனில் உள்ள வீடுகளில் தான் இந்த பாதுகாப்பு திட்டம் உள்ளது. கதவு நிலையில் உள் பக்கமாக ஒரு பிளாஸ்டிக் போன்ற நாடா 3 பக்கமாக இருக்கிறது. இதில் சிறிதாக நெருப்பு பட்டால், அல்லது வெப்பம் அடைந்தால் …. அது உடனே உருகி… ரப்பர் போட ஒட்டிக் கொள்ளும்… இதனால் கதவை நாம் …

பூட்டினால்,  பின்னர் திறப்பது என்பது முடியாத காரியம். உண்மையில் இந்த பாதுகாப்பு… நாடா தேவை தானா ? என்ற கேள்வி பலரால் பல தடவை எழுப்பப்பட்டுள்ளது.. உண்மையில் வீட்டில் நெருப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? , ஈரத் துணியை முகத்தில் கட்டினால் என்ன நடக்கும் ? . இதோ நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தெரிந்து வைத்திருக்கவேண்டிய சில முக்கிய தகவல்களை நாம் இங்கே தருகிறோம். நிச்சயம் உங்கள் உறவினர் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

1] வீட்டில் நிச்சயம் ஒரு இடத்திலாவது பயஃர் எலாம் ( ஆபத்து மணி) பொருத்தி இருப்பது நல்லது. வெறும் £5 பவுண்டுகளில் இருந்து வாங்க முடியும்.
2] வீட்டில் தீ ஏற்பட்டால் பலர் இறப்பது கருகி அல்ல. புகையை சுவாசித்து தான். எனவே நீங்கள் நிற்க்கும் இடத்திற்கு வெளிக் காற்று உடனே வர வேண்டும். ஜன்னல் கண்ணாடியை உடையுங்கள்.
3] அருகில் உள்ள தண்ணீரை பாவித்து, ஒரு துணியை நனைத்து. அதனை மூக்கை சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். இதனால் காபன் டை ஆக்சைட் அதிகம் உங்கள் மூக்கு வழியாக செல்லாது.
4] வீட்டில் உள்ள சிறு பிள்ளைகள் தொடக்கம் அனைவருக்கும் தீ ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லி வையுங்கள். இதனை இரவுச் சாப்பாடு சாப்பிடும் போது, குடும்பமாக சாப்பிடும் போது பேசிக் கொள்ளுங்கள்.
5] வீட்டில் உள்ள அம்மாவின் அல்லது மனைவின் சேலை: 2 சேலையை ஒன்றாக ஆக்கி, அதனை கயிறு போல பாவித்து வெளியே இறங்க முடியும்.
6] இல்லையென்றால் சேலையை குழந்தைகள் இடுப்பில் கட்டி அவர்களை முதலில் வெளியே இறக்கி விடுவது.
7] படுக்கை அறையில் நீங்கள் இருந்தால், உடனே உங்கள் குவில்ட்(போர்வை) வெளியே எறிந்து விட்டு. அதன் மீது குதிப்பதே நல்லது. கால் கை முறியக் கூடும். ஆனால் உயிர் தப்பும்
8] இவை அனைத்துக்கும் முன்னரே 999 க்கு டயல் செய்து தீ அணைக்கும் பிரிவோடு தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அதனை செய்யும் அதேவேளை நேரத்தை தாமதிக்காமல் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதும் தப்ப வழி தேடுவது நல்லது. அவர்களோடு பேசிக் கொண்டு இருந்தால் உயிர் பாதுகாக்கப்பட மாட்டாது.
9] வயதானவர்கள் வீட்டில் இருந்தால், அவர்களால் குதிக்க முடியாது என்றால். அவர்களை ஜன்னல் பக்கமாக நகர்த்தி காற்று வரும் இடத்தில் உட்கார வையுங்கள்
10] கடைசி விடையம்: பதற்றம் அடைய வேண்டாம். நிதானம் தேவை சமயோசித புத்தி தேவை. பதற்றம் அடைந்தால் புத்தி கெட்டு விடும். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல விடையங்களை நான் செய்ய ஆரம்பித்து விடுவேம். எனவே தமிழர்களே வர முன் காப்போம்.

Contact Us