எத்தனை நாட்கள் தான் பொறுப்பது- வேட்டையில் இறங்கிய சூடன் பொலிஸ்… சிக்கியது யார் யார் தெரியுமா ?

உகாண்டா என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 16ஆம் தேதியன்று தலைநகர் கம்பாலாவில் இருக்கும் பாராளுமன்ற கட்டிடத்திலும், தலைமை காவல் நிலையத்திற்கு அருகிலும் தீவிரவாதிகள், தொடந்து மூன்று தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தினர். இதில், நான்கு நபர்கள் உயிரிழந்தனர்.

மேலும், 33 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தற்கொலைப் படைதாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்நிலையில், தாக்குதலுக்குப் பின் உகாண்டா பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை வேட்டையாட களமிறங்கினர்.

அதன்படி, உகாண்டாவின் லிவிசா, லுவிரோ, பண்டிபுகு, பிரிர்வி, டுரோகோ, போன்ற நகரங்களில் நேற்று, அதிரடியாக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் 21 நபர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us