இறந்த லண்டன் தமிழர்களுக்கு பல வெள்ளை இன மக்கள் அஞ்சலி- நெஞ்சை உருக்கும் காட்சிகள்..

லண்டனில் உள்ள Bexleyheath என்னும் பகுதியில், ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் அந்த வீட்டில் வசித்த இலங்கையை சேர்ந்த நிரூபா என்ற இளம்பெண், அவரின் மகள் ஷாஷ்னா, மகன் தபீஷ் மற்றும் அவர்களின் பாட்டி ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

அந்த வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் குடி வந்துள்ளார்கள். தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? என தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வசித்த குடியிருப்பின் அருகில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள், அந்த குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தி மலர்வளையம் வைத்துள்ளனர்.

அதில், “என் மனம் வலிக்கிறது, விலைமதிப்பில்லாத உயிரை நீங்கள் இழந்துவிட்டு சென்றதற்கு” என்று எழுதப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்தப்பட்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Contact Us