42 வயதில் நங்கூரமாக புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. வெறும் பனியனில் வெளியாகும் புகைப்படம்

உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு வெற்றி கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் கதாநாயகியாக மட்டும் நடித்த மாளவிகாவிற்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையாததால் குணச்சித்திர வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில படங்களுக்கு கவர்ச்சி உடையில் நடனம் ஆடியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை, வெற்றிக்கொடி கட்டு மற்றும் திருட்டுப் பயலே போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதிலும் குறிப்பாக இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இவர் தொடர்ந்து அஜித்துடன் உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய இரண்டு படங்கள் நடித்ததை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு காலத்திற்கு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி திரைவாழ்க்கையில் அது நடக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு 2009ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

Contact Us