ஆணாக மாறி பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட கனேடிய பெண்

கனடாவில் தன்னை ஆணாக சித்தரித்து பல பெண்களிடம் பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறன்ரொவை சேர்ந்த Aleth Duell என்ற 69 பெண்ணே இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டார். குறித்த பெண் தன்னை ஆணாக சித்தரித்து டேட்டிங் வலைத்தளத்தில் பல பெண்களிடம் நட்பாக பழகியுள்ளார்.

பின் அந்த பெண்களை காதல் வலையில் விழவைத்து அவர்களிடம் பணத்தை பெற்று வந்துள்ளார். மேலும் தனக்கு தனியாக ஒரு வாங்கி கணக்கினை தொடங்கி தருமாறும் அதில் நீங்கள் கொடுத்த பணத்தை திரும்பி செலுத்திவிடுகிறேன் என்று கூறியும் ஏமாற்றியுள்ளார்.

Aleth ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பிரிட்டீஷ் கொலம்பியா, ஒன்றாறோவில் நிறைய பேர் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். இது தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

Contact Us