“ஒரே நிமிஷத்தில் உன்னை …”பெண் டாக்டருக்கு ,போலிஸ் இன்ஸ்பெக்டரால் நேர்ந்த விபரீதம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் உள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் ஓஷோ பாலகன் என்ற பெண் டாக்டர் எமெர்ஜென்சி வார்டில் பணியாற்றுகிறார் . இந்நிலையில் அங்குள்ள கிட்ச்லு நகர் காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பர்மிந்தர் சிங் கடந்த வாரம் ஒரு நாள் இரவு குடித்து விட்டு அந்த பெண் டாக்டர் பணியாற்றும் ஹாஸ்ப்பிட்டலுக்குள் வந்தார். அப்போது அந்த போலீஸ் அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும அந்த பெண்ணிடமும் தகறாரு செய்துள்ளார். அப்போது சமாதானம் செய்ய வந்த அந்த பெண் டாக்டரிம் ஒரே நிமிடத்தில் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இந்த மிரட்டல் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது .

இதனால் பயந்து போன அந்த பெண் டாக்டர் அந்த போலீஸ் மீது அங்குள்ள காவல் நிலைய உயரதிகாரிகளிடம் புகார் கூறினார் .போலீசார் அந்த சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்தனர் .இது பற்றி அங்கிருந்த ஒரு மருத்துவ அதிகாரி கூறுகையில் ,அவர் மிகவும் ஆக்ரோஷமானவர் என்றும், காவல்துறையினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை என்றும் மருத்துவ அதிகாரி கூறினார். உயர் போலீஸ் அதிகாரிகள் வந்த பிறகு அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Contact Us