இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவர் தான் – வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக் பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. தொடங்கப்பட்ட சில நாட்களிலே, மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் நமிதா மாரிமுத்து அதிரடியாக அதில் இருந்து வெளியேறினார். இதையடுத்து சின்ன பொண்ணு உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த வாரம் இசைவாணி வெளியேறுவார் என்று தகவல் வந்துள்ளது. ஆரம்பத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்து காப்பாற்றப்பட்ட போட்டியாளராக இவர் இருந்தாலும், தற்போது தாமரையுடன் இவர் பயங்கர சண்டை போட்டதால் ரசிகர்களுக்கு இவர் மீது இருந்த நம்பிக்கை பறிபோனது. ரசிகர்கள் செல்வாக்கை இழந்ததால் இவர் இந்த வாரம் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Contact Us