தொலைந்துபோன கூட்டமைப்பு வன்னி எம்-பி கண்டுபிடிக்கப்பட்டார்; தண்ணியடித்துவிட்டு தமிழர்களைப்பற்றி ஜோசித்தாராம்!

கடந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு பின்பு, பாராளுமன்றம் முதல்முறையாக கூடியபோது பாராளுமன்றில் வடை, ரீ (tea) போன்றவற்றை குடித்துவிட்டு படுத்துறங்கினார் கூட்டமைப்பு எம்.பி வினோ நோதரலிங்கம்.

அதற்கு பிறகு அவரது அலுவலகத்தில் காட்ஸ் விளையாடி, தண்ணியடித்து, கோல்ட் லிப் பொத்திக்கொண்டு தமிழர்களுக்கு எப்படி உரிமையை பெற்றுக்கொடுப்பது என்று தீவிரமாக ஜோசித்துக்கொண்டிருந்ததாக தகவல்.

இந்நிலையில் கொஞ்ச நாளுக்கு முன் விநோ எம்.பி எங்கேயோ தொலைந்து விட்டார் என தமிழ் மக்கள் மத்தியிலும் சக எம்.பிக்கள் மத்தியில் பேச்சு எழுந்த நிலையில் பல மாதங்களுக்கு பின் நேற்றையதினம் பாராளுமன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

நாங்கள் நினைக்கிறோம் முதல் அமர்வில் தூங்கியவர் அப்படி தூங்கிட்டார் போல நேற்றுத்தான் நித்திரை முறிந்ததோ?

Contact Us