சூர்யாவின் சுய மரியாதை போச்சா? சாதித்த அன்புமணி வன்னியர்கள்; வெளியான மன்னிப்பு அறிக்கை!

ஒரு காலண்டர் படம் சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை

குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டரை காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல

திரைப்படத்தில் சில வினாடிகள் மட்டுமே வரும் காலண்டர் படம் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை என ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் படம் வெளியாகும் முன்பே கவனத்திற்கு வந்திருந்தால் அதை மாற்றி இருப்போம்

எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவுமில்லை மன வருத்தம் அடைந்தவர்களுக்கு உளப்பூர்வமான வருத்த‌த்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தனது ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Contact Us