வரும் போது என்ன வாங்கிவாறது ??? என கேட்ட பாட்டி: மனைவி, குழந்தைகளை இழந்து மனநிலை குழம்பிய நிலையில் கணவன்

தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லி பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில், 4 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மனைவி தனது கணவருக்கு போன் அடித்து வீட்டில் தீ என்று கத்தியுள்ளார். யோகன் என அறியப்பட்ட கணவர் வீட்டில் இருந்து 20 நிமிட தொலைவில் உள்ள கடையில் பணியாற்றுகின்றார். அவர் உடனே புறப்பட்டு, 15 நிமிடங்களில் வீடு வந்து விட்டார். அனால் அதற்கு முன்னதாகவே எல்லாம் முடிந்து விட்டது. அவருடைய தாயார் தனது பேரப் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக லண்டன் வந்திருந்தவர். அவரது பயண ஏற்பாட்டின்படி அவர் வெள்ளிக் கிழமை, இலங்கைக்குத் திரும்பியிருக்க வேண்டும்.  இருப்பினும்….

இதே வேளை இலங்கையில் உள்ள உறவுகளுக்கு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் ‘வட்சப்‘ மூலம் லண்டனில் இருந்து தொடர்பு எடுத்த பாட்டி இலங்கை திரும்பும் போது என்ன என்ன பொருட்கள் வாங்கிவாறது என கேட்டதாக உறவுகள் தமது முகப்புத்தகத்தில் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.  இந்தத் தீவிபத்தில் மரணமானவர்கள் அராலி வடக்கை பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் லண்டன வதிவிடமாகக் கொண்டவர்கள் என சமூகவலைத்தளப் பதிவுகள் தெரிவித்துள்ளன.  இப்போது யோகன் அபேவூட்டில் உள்ள தனது சகோதரியுடன் தங்கியுள்ளார். தன்னுடைய மகளின் பெயரைச் சொல்லி அழுதபடியுள்ளார். மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். என உறவுகள் தெரிவித்துள்ளார்கள். அவருக்கு மன தைரியத்தையும் , இறந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்குமாக நாம் பிரார்த்திப்போமாக…

 

Contact Us