எதுக்கு இப்படி பண்றீங்க..? கழிவறை கதவுகளை அகற்றிய பள்ளி நிர்வாகம்… அதிர்ச்சியில் மாணவ-மாணவிகள்..!!

கனடாவில் Sackville நகரில் உள்ள Tantramar Regional High School என்ற பள்ளியில் கழிவறை கதவுகள் திடீரென அகற்றப்பட்டுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த Madyson Wells என்ற மாணவி இதுகுறித்து புகார் அளிப்பதற்காக பிரின்சிபல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முன்பு பல மாணவ மாணவிகள் கூடி இருந்துள்ளனர். இந்த நிலையில் வாக்குவாதம் அதிகரித்த காரணத்தினால் பிரின்சிபல் மாணவ மாணவிகளில் சிலரை இடை நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்த நிலையில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் பள்ளி நிர்வாகமும் கழிவறையில் கதவுகள் மீண்டும் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் கழிவறைகளை பிள்ளைகள் பயன்படுத்தும் நேரம் குறைக்கப்படும், கழிவறைக்கு ஒரே நேரத்தில் குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலர்கள் வந்து கழிவறைகளை சோதனை செய்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் Madyson தனக்கு பள்ளிக்கு போகவே விருப்பம் இல்லை என்று தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன் பிறகு “இது பிள்ளைகளின் தனி உரிமையை மீறும் செயல்” என்று அவரது தாயாரும் பிரின்சிபலிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கழிவறையில் சில மாணவ மாணவிகள் கஞ்சா புகைப்பதால் தான் இந்த நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு வழி இல்லாமல் மீண்டும் கழிவறையில் கதவுகளை பொருத்த வேண்டிய நிலைக்கு அப்பள்ளி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

Contact Us