யாழில் “”கொல்பவன்”” என்ற புலிகளின் பெரும் வெடி குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது !

யாழ்.தீவகம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிகை நகர் பகுதியில் கிடங்கு ஒன்றில் காணப்பட்ட கிளைமோர் வெடிகுண்டு ஒன்று இராணுவத்தினரால் சற்று முன் மீட்கப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் எடை 6KG ஆகும் என்று கூறப்படுகிறது. குறித்த வெடிபொருளில் SN 96 எதிரியின் பக்கம் என்றும் கொல்பவன் வெல்வான் – தயாரிப்பு தமிழீழம் என்றும் எழுதப்பட்ட நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.  எந்தப் பக்கத்தை … எதிரியின் ..

பக்கம் நோக்கி வைக்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டு உள்ளது என்பதும். பின் பகுதியில் தமிழீழம் என்று எழுதப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us