சினிமாவில் அறிமுகமாகும் சாய் பல்லவியின் தங்கை… பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்…!!!

சமீபகாலமாக ஓடிடியில் ரிலீஸாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்ததாக சித்திரைச் செவ்வானம் என்ற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் விஜய் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சித்திரைச் செவ்வானம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார். மேலும் இவர் சில குறும்படங்களில் நடித்திருந்தார். தற்போது சித்திரைச் செவ்வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us