கனடாவில் பரபரப்பு….ரத்த வெள்ளத்தில் தேநீர் கடைக்குள் புகுந்த நபர் உயிரிழப்பு

வான்கூவர் பகுதியில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகருதியில் உள்ள தேநீர் கடை ஒன்றில் ரத்த காயங்களோடு நுழைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் 31 வயதான ரியான் கிராஸிலி என்பவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பகல் சுமார் 6.30 மணியளவில் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள காபி கடை ஒன்றில் இரத்தம் வழிய நுழைந்துள்ளார் 51 வயதான Robert Powshuk. இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராஸிலி மற்றும் Powshuk ஆகியோர் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், ஆனால் இருவரும் நன்கு அறிமுகமானவர்களா என்பது தெரியவில்லை எனவும், கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Contact Us