இரவோடு இரவாக திடீரென சிறைபிடிக்கப்பட்ட நடிகர்- பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்-நடந்தது என்ன?

சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் வாரிசு நடிகர்களே அதிகம் அறிமுகமாகின்றார்கள் என்று தான் கூற வேண்டும்.அந்தவகையில் வாரிசு நடிகரான காளிதாஸ் ஜெயராம் தமிழை தாண்டி மலையாள சினிமாவிலும் படங்கள் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அங்கீகாரம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இப்போது இவர் வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றிருக்கிறார் எனவும் படப்பிடிப்பு முடித்துவிட்டு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார் எனவும்குறிப்பிடப்படுகின்றது.

அப்போது படக்குழு ஹோட்டலில் தங்குவதற்கான பணத்தை கட்டாததால் ஊழியர்கள் அவரிடம் கேட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் சில காரணங்களால் படக்குழு மற்றும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட நடிகர் காளிதாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் சிறைப்பிடித்துள்ளனர். பெரிய பிரச்சனைக்கு பிறகு இறுதியில் படக்குழு பணத்தை எப்படியோ கட்டியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

Contact Us