தற்போது தலையை பிய்த்துக் கொள்ளும் அமெரிக்கா- சீனாவின் ஏவுகணை திறன் மிக மிக ஆபாத்தான ஒன்று என்கிறார்கள் !

சீனா சமீபத்தில் பரிசோதனை செய்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை, ஒலியை(சத்தம்) விட 5 மடங்கு வேகமாகச் செல்லக் கூடியது. இது விண் வெளி வரை பயணித்து. பின்னர் தான் தாக்க வேண்டிய இடத்தை துல்லியமாக தாக்க வல்லது. இதில் அணுகுண்டை பொருத்தி அனுப்ப முடியும். மேலும் சொல்லப் போனால், அமெரிக்காவின் எந்த ஒரு ராடரிலும் இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை தென்படாது என்பது மிகவும் அதிர்ச்சியான விடையம். ஏன் எனில் இந்த ஏவுகணையை சீனா பரிசோதனை செய்த வேளை, அமெரிக்காவின் எந்த ஒரு சாட்டலைட்டும் , சீனாவின் இந்த ஏவுகணையை கண்டு பிடிக்கவே இல்லை. இதனை ஒட்டி அமெரிக்க பாதுகாப்பு நிலையமான பெண்டகன் பெரும் கவலை கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சீனா எந்த வகையான ..

தொழில் நுட்ப்பத்தை பாவித்து இந்த ஏவுகணையை செலுத்தியது, இதனை எப்படி கண்டு பிடிப்பது என்று அமெரிக்க பாதுகாப்பு விஞ்ஞானிகள் இரவு பகலாக ஆராய்ந்து வருகிறார்கள் என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவே சீனாவின் வளர்சியைப் பார்த்து ஆட்டம் கண்டுள்ள நிலையில். அருகில் உள்ள இந்தியா சீனாவை குறைத்து மதிப்பிடுவது என்பது பெரும் ஆபத்தான விடையம்.தற்போது உள்ள சூழலில் ரஷ்யா , இஸ்ரேல் போன்ற நாடுகளை காட்டிலும் மிக மிக ஆபத்தான நாடாக சீனா மாறிவிட்டது என்பது தான் உண்மை.

Contact Us