சிங்களத்தின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு அமைச்சர்கள் இவர்கள் இருவர் தான்: பாருங்கள் எத்தனை பீலா என்று..

சிங்கள அரசாங்கத்தின் வெளிப்படுத்தப்படாத வெளிவிவகார அமைச்சர்களாக தமிழரசுக்கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தான் என்பது தமிழர்கள் நன்கு அறிந்த விடையம். தமிழர்கள் துயருறும்போது அந்த துயரங்களில் துளியும் பங்குபெறாதவர்கள். தமிழர்களின் வலியறியா மேட்டுக்குடிகளின் கைகளில் தமிழர்களின் எதிர்காலத்தை எப்படிக் கொடுப்பது ? இதனைத் தான் வலையத் தளத்தில் உள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் கேள்வியாக முன் வைக்கிறார்கள். அமெரிக்க அரசு தம்மை அழைத்ததாக பொய் கூறி, அமெரிக்கா சென்று அங்கே ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து விட்டு ஜெனிவா கிளம்புகிறார் சுமந்திரன்.

கனடாவில் வாங்கிக் கட்டியது போதாது என்று, ஜெனீவாவில் இருந்து நாளை லண்டன் வருகிறார் சுமந்திரன். லண்டனில் என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ… அவனே அறிவான். கனடா தமிழர்கள் போல லண்டன் தமிழர்கள், பொறுமையாக நடந்து கொள்வார்களா ? என்பதில் பெரும் சந்தேகம் இருக்கு… பெரும் தேர் திருவிழா ஒன்று நாளை லண்டனில் இருக்கு போல… அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

Contact Us