திடீரென கொரோனா தொற்று: வைத்தியசாலையில் அனுமதியான கமல்- பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார்..?

உலக நாயகன் கமல ஹசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்கா சென்று சென்னை திரும்பிய கமல ஹசனுக்கு லேசாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. இதனை அடுத்து அவர் PCR பரிசோதனை எடுத்துக் கொண்டார் என்றும். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இருமல் குறைந்தபாடா இல்லை. இதன் காரணத்தால் சற்று முன்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. அவருக்கு மேலதிக சிகிச்சை கொடுக்க வைத்தியர்கள் விரைந்துள்ளார்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கமல் தனது ரிவீட்டர் வழியாக வேண்டு கோள் விடுத்துள்ளார். ஆனால்…

அவரே பாதுகாப்பாக இருக்க நடந்து கொள்ளவில்லை என்று, சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். பொதுவாக திரைத் துறையினர் தான் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக கூடி படப் பிடிப்புகளை நடத்தி வருகிறார்கள் என்றும். இதனால் பல கலைஞர்கள் பாதிப்படைந்து வருவதாகவும் சென்னை நெட்டிசன்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Contact Us