பாதுகாப்பே இல்லாத டாங்கிளை £5.5 பில்லியனுக்கு வாங்கி வீண் செலவு செய்த அதிகாரிக்கு £120,00 ஆயிரம் போனஸ்- மக்கள் வரிப் பணம் நாசம்

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு அஜெக்ஸ் என்னும் ஒருவகை டாங்கிகளை கொள்வனவு செய்துள்ளது. இதனை வாங்க வேண்டும் என்று கூறியவர் சர்.சிமன் என்னும் ராணுவ உயர் அதிகாரி. இதற்காக அவர் சுமார் 5.5 பில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளார். பெரும் இரைச்சலை ஏற்படுத்தும் இந்த டாங்கிகள், உள்ளே உள்ள வீரர்களை அதிரவைக்கும் அளவு, கடினமான முறையில் பயணிக்கிறது. அது போக பாதுகாப்பும் இல்லை, என்றும் கூறப்படுகிறது. இதனால் இதனை படையில் இணைக்க படையினர் தயக்கம் காட்டி வரும் நிலையில். சர்.சிமனுக்கு 120,00 ஆயிரம் பவுண்டுகளை போனஸாக கொடுத்துள்ளது பாதுகாப்பு துறை அமைச்சு. அவர் ஏற்கனவே வரும் ஒன்றிற்கு 280,000 ஆயிரம் பவுண்டுகளை சம்பளமாகப் பெறும் நிலையில். அவர் 5.5 பில்லியன் பவுண்டுகளை நாசம் செய்து உள்ளார் என்ற குற்றச்சாட்டும் இருக்கையில், எவ்வாறு போனஸ் வழங்கினீர்கள் என்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு, மக்கள் வரிப்பணத்தில் 5.5 பில்லியன் பவுண்டுகளை நாசம் செய்திருக்கிறது என்பது தான் உண்மை நிலை.

Contact Us