ஐரோப்பிய தமிழர்களே அவதானம் – “5 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு!”.. எச்சரிக்கும் உலக சுகாதாரத்துறை..!!

ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல மக்களுக்கு தகுந்த அளவில் தடுப்பூசி அளிக்கப்படவில்லை. மேலும், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, தான் கொரோனா அதிகரித்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி அளிப்பதை அதிகரிக்கவேண்டும். மேலும், அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் புதிதான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது ஆகியவை உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார துறை, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை எனில் மார்ச் மாத முடிவிற்குள் 5 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்திருக்கிறது.

Contact Us