பிரித்தானியாவில் இனி இது காட்டாயம்…அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டம்

பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் நாட்டில் கொண்டுவரவுள்ள புதிய சட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு முதல் கட்டப்படும் புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை நிறுவுவது சட்டப்படி கட்டாயமாகும். இங்கிலாந்தில் 2022 முதல் காட்டப்படும் புதிய கட்டிடங்களும் இந்த விதிமுறையை கடைபிடிப்பது சட்டமாகும்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 1,45,000 சார்ஜிங் புள்ளிகள் நிறுவப்படும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. 2030 முதல் புதிய பெற்றோல் மற்றும் டீசல் காரகளுக்கான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின் படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மற்ற பகுதிகளை விட லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் அதிக பொது கார் சார்ஜிங் புள்ளிகள் உள்ளன. புதிய சட்டங்கள், இப்போது பெற்றோல் அல்லது டீசல் காரில் எரிபொருள் நிரப்புவதைப் போல எளிதாக மாறும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

Contact Us