கனடா மார்க்கம் நகரில் புலம்பெயர் தமிழன் நிசாந்தன் மீது பொலிஸ் பாய்ந்தது!! நடந்தது என்ன?

கனடாவின் ரொடரன்டோவில் பணபரிமாற்ற நிலையம் நடத்தும் தமிழர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்டாரியோவில் இயங்கும் அவரது நிதி பரிவத்தனை நிலையம், பணப்பரிவத்தனை சட்டங்களிற்கு உட்படாதது, கனடாவின் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அறிக்கைகள் பகுப்பாய்வு மையத்தினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மார்க்கம் நகரத்தை சேர்ந்த குணபாலன் நிஷாந்தன் (38) என்பவர் மீதே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. Steeles Avenue East, Toronto Ontario இல் இவரது சாய்சன் துரித பணப்பரிமாற்ற நிலையம் அமைந்துள்ளது. அது பணசேவை வணிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி, பயங்கரவாத நிதியொழிப்பு சட்டம் ஆகியவற்றிற்கு தவறான தகவல்களை தெரிந்தே வழங்கிய விவகாரத்தில் அவருக்கு எதிரான 4 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

ரோயல் கனேடியன் மவுண்டட் பொலிசாரினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டன.

அவர் டிசம்பர் 16ஆம் திகதி டொராண்டோ, பழைய சிட்டி ஹோல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

Contact Us